By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!

Last updated: April 11, 2026 2:07 pm
April 11, 2026
28 Views
Share
SHARE

கருங்கல், ஏப். 11 –

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிம்லர் நேற்று முன்தினம் கருங்கல் பகுதியில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகளின் ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களை சிந்திக்கும் திறனற்ற கூட்டமாக மாற்றி விட்டார்கள்; இளைஞர்கள் சிந்திக்கும் திறனோடும், துணிச்சலோடு நெஞ்சை நிமிர்த்தி பொருளாதாரத்தில் வலிமையோடு இருந்திருந்தால் 1000க்கும் 2000க்கும் இவர்கள் வாக்குகளை வாங்க முடியுமா?

நாட்டில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க இளைஞர்கள் தயங்குகின்றனர்; சிந்திக்கும் திறனற்றவர்களாய் போதைக்கு அடிமையாக்கி விட்டனர்; படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கூட வழங்க முடியவில்லையென்றால் இந்த அரசு எதற்கு? அவர்களுக்கு ஏன் இளைஞர்கள் வாக்கு செலுத்த வேண்டும்?

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும். கேரளாவில் கள்ளுக்கு தடையில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிப்பு? எந்த கலப்படமும் இல்லாத உடலுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருள் கள்; கள் உணவின் ஒரு பகுதி என்று இந்திய சட்டம் கூறுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கள் மீதான தடையை நீக்குவோம்; பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்று சொல்கிறார்கள். நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து 22 வருடங்களாக தண்ணீர் தராமல் கேரள அரசு அடைத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கு எதிராக என்ன போராட்டத்தை முன்னெடுத்தார்கள்? தண்ணீர் கிடைக்காததால் நெல் விவசாயம் நடைபெறவில்லை; விவசாயிகள் கதறுகின்றனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதும் நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வருவோம். மேலும் ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் நிறைந்துள்ள கால்வாயை மீட்டெடுப்போம் என அவர் பேசினார். இந்த வாகன பரப்புரையின் போது வேட்பாளர் ஹிம்லர் பேச்சை கேட்க ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தென்னரசுவிடம் ஓட்டு

January 18, 2025
43 Views
மிடாலத்தில் நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை திறப்பு
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 382வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account