கிருஷ்ணகிரி, அக்.08
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவை, வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேச நலனுக்கான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் சேவா ஜோதி யாத்திரை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கவியரசு ஜோதி ஏற்றி யாத்திரையைத் தொடங்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த யாத்திரையில், மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சேவா ஜோதி யாத்திரைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.



