கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 01 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்ட்வேர்ஸ் 15 வருடமாக இயங்கி வரும் கடையில் இரவில் மர்ம நபர்களால் பூட்டை உடைத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 8 கிராம் தங்க காசு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றிருந்தனர். இதை காலையில் கடைத் திறக்க வந்த உரிமையாளர் சிவஞானம் பார்த்தவுடன் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.