தாம்பரம், ஜூலை 1 –
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் 1.02 கி.மீ. க்கு கழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து பின்னர் பேரணியில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பேரணி நடைபெற்றது. மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மருத்துவர் ஆர்.எஸ். கிருத்திகாதேவி தலைமையில் மாவட்டம் மருத்துவர் அணி அமைப்பாளர் டி. பி. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாநில மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ந. எழிலன், மாநில மருத்துவரணி தலைவர் கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது மேற்கு தாம்பரம் பாபு மகப்பேறு மருத்துவமனை முதல் தாம்பரம் சண்முகா சாலை வரை 1.02 கிலோமீட்டர் தூரம் சென்றது. இந்த பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த பேரணியில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ. காமராஜ், கழக தீர்மானகுழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ. தமிழ்மாறன், மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்தராஜ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.