விழுப்புரம், ஜூலை 31 –
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம் கம்மந்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக் கண்காட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று முதல் பணியாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4,000/- வழங்கும் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைபெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் 1 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களைதேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்புபணி ஆய்வுபுகைப்படங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை கம்மந்தூர் ஊராட்சியினைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.