By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
இராமநாதபுரம்

கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

Last updated: August 22, 2025 4:22 pm
August 22, 2025
29 Views
Share
SHARE

இராமநாதபுரம், ஆகஸ்ட் 22 –

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனைத் தீர்க்க புதிய அங்கன்வாடி மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மையம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தைச் சிலர் எதிர்த்து வருகின்றனர்.

மேலும் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் பல ஆண்டுகளாக சிலர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த நிலத்தை மீட்டு தங்களது கிராமத்திற்கு தருமாறும் கோரிக்கையுடன் இன்று 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அனுமதி வழங்கியபடி புதிய அங்கன்வாடி மையம் விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வரும் சிலரை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நலனுக்கான இடங்கள் தனிநபர்களின் வசம் இருக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினர். சம்பவம் காரணமாக கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதற்ற நிலை நிலவியது.

இதுகுறித்து கமுதி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மனோகரன் விரைந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போராட்டம் குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழா
கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
ஆசியர் கழக உறுப்பினர் பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா

September 2, 2024
72 Views
சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா
ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டபுதிய கட்டடங்களை
பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account