கன்னியாகுமரி, ஆக. 4 –
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் (50). இவர் அப்பகுதியில் உள்ள தேவி முத்தாரம்மன் கோவிலில் பொருளாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 7 மணி அளவில் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது அங்கிருந்த சூலாயுதத்துடன், அருகில் உள்ள சிவ சுடலை சுவாமி கோயிலையும் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மதன் தென்தாமரை குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் கோவில் இருந்து திருட்டுப் போன பணம் ரூ. 5 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


