ஒட்டன்சத்திரம், செப். 19 –
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிமந்தையம் மற்றும் கரியாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்
கொண்டார்.
மேலும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களிலிருந்து 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகிய நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா. கண்ணன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சை காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, குமரன் ஆகியோர் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



