கிருஷ்ணகிரி, ஜூன் 28 –
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இருந்தும் கடந்த ஆறு மாத காலமாக வேலை வழங்காததை கண்டித்தும், உடனடியாக பணியாளர்களுக்கு வேலை குறைந்த பட்சம் 100 பேர் வீதம் வழங்கிட கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்ட தலைவர் லெனின் தலைமையில் கல்பனா முருகன், திருமால், கல்பனா, அகிலா, மாரியப்பன், ராக்கியம்மாள் ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் முத்து, வட்ட செயலாளர்கள் சபாபதி, செல்வராசு, பகுதி தலைவர் சேகர், வி.ச மாவட்ட செயலாளர் பிரகாஷ், பகுதி செயலாளர் வேலு ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.