ஊத்தங்கரை, செப்டம்பர் 25 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செஞ்சுலுவை சங்கம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை தாங்கினார். இயற்பியல் விரிவுரையாளர் கண்ணதாசன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஸ்ரீபால், சரண்யா மற்றும் செல்வி சரண்யா உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கினர். இம்முகாமில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கில விரிவுரையாளர் சக்திவேல் மற்றும் வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்தனர். இந்த மருத்துவ முகாமில் சுமார் 550 மாணவர்கள் பயனடைந்தனர். ஆங்கில பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.



