By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
கனஂனியாகுமரி

ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி

Last updated: July 7, 2025 3:52 pm
July 7, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்துவிட்டாலும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயில்கள் வரும்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வந்தால் சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையிலிருந்து வரும் ரயிலை உள்வாங்கும் வரை டவுன் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயில், அதன் ரயில் தடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனை தவிர்த்து இரு ரயில்களும் நிற்காமல் இரட்டை பாதையில் எதிரெதிரில் செல்லும் வகையில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் பாடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை இந்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பணிக்காக ராட்சத கிரேன்கள் மூலம் பாலம் பொருத்தும் பணிகள் நடைபெற்றது. இதற்காக ரயில் தடத்தில் பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட நேரமான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பதில் காலை 7 மணிக்கு தாமதமாக பணிகள் நிறைவு பெற்றன. இதனால் காலை 7 மணிக்கு பின்னரே ரயில் தடத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக காலை 4.40க்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரவேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் பணகுடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வள்ளியூரில் நிறுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு பாலப்பணிகள் நிறைவு பெற்று மின்சாரம் வழங்கிய பின்னரே இந்த ரயில்கள் நாகர்கோவில் புறப்பட்டன. கோவை எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காலை 8:05 மணிக்கும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தன. இதுபோல் பெங்களூரில் இருந்து காலை 7:20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு வரவேண்டிய ரயில் காலை 8:30 மணிக்கு வந்தது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் இணைப்பு ரயிலாக திருவனந்தபுரம் பயணிகள் ரயில் காலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் கிளம்புவதற்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுபோல் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வந்துவிட்டு பின்னர் கொல்லத்திற்கு 8 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் கால தாமதமாக நாகர்கோவில் வந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது. கோவை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் உறவினர்களை அழைத்து செல்ல நாகர்கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார் மற்றும் பைக்குகளில் வந்த உறவினர்களும் ரயிலில் வந்த பயணிகளும் ஏறத்தாழ 3 மணி நேரம் தாமதம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

January 7, 2026
44 Views
பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account