குரோம்பேட்டை, ஜூன் 30 –
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை TNHB குடியிருப்பு வளாகத்தில் இருந்து பச்சை மலை நோக்கி நடைப்பயணம் தலைவர் எஸ்.மோகன் அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். நடைப்பயணம் TNHB குடியிருப்பு வளாகத்தில் இருந்து புறப்பட்டு துர்கா நகர் வரை சென்று மீண்டும் TNHB வளாகத்தில் வந்தடைந்தனர்.
இதில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன்னிறுத்தி பதாகைகளுடன் கோஷமிட்டனர். இதில் டி.கே. ரங்கராஜன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் எஸ். காசி, குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரியல் நிபுணர் ஆர். திருமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லைன்ஸ் கிளப் கவர்னர் உதய சூரியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் TNSF, CYC, UNITE, SCRWA, DYFI, SFI, காயிதே மில்லத் கல்லூரி, ஏ.எம். ஜெயின் கல்லூரி, முகம்மது சதக், எஸ் ஐ வி டி கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள்
நல சங்கத்தின் பொறுப்பாளர்கள், மத்திய மாநில ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தினர், மூத்த குடிமக்கள், பெண்கள் பார்வதி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருவாளர்கள் மு.சி பலராமன், TNHB குடியிருப்பு நல சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், சிவப்பிரகாசம், சதாசிவம், மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழு கங்காதரன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் செயலாளர் எம். தங்கராஜ் பச்சமலை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானத்தை வாசித்தார். இறுதியில் அனைவருக்கும் துணிப்பை, காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது பி.எஸ். அப்பா நன்றி உரையாற்றினார்.