ஈரோடு, ஜூன் 30 –
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாளை விழா மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 500 பேருக்கு சம பந்தி விருந்து வழங்கப்பட்டது. ஈரோடு மாநகர மாவட்டம் ஈரோடு ஒன்றியம் மொடக்குறிச்சி தொகுதி மற்றும் மூலப்பாளையம் பகுதி காசிபாளையம் பகுதி சார்பாக இந்த நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு ஒன்றிய செயலாளர் கலையரசன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கௌதம், பிபி அக்ரஹார பகுதி செயலாளர் சுதாகர், மூலப் பாளையம் பகுதி செயலாளர் ராஜசேகர், காசிபாளையம் பகுதி சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வி மற்றும் நிர்வாகிகள், மொடக்குறிச்சி தினேஷ் குமார், கொடுமுடி பிரகாஷ், ஈரோடு மாரிமுத்து, ராஜ்குமார், ஜெயக்குமார், பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி விழா, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் விழா, ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. ஈரோடு மாநகர மாவட்டம் ஈரோடு ஒன்றியம் மொடக்குறிச்சி தொகுதி மற்றும் மூலப்பாளையம் பகுதி காசிபாளையம் பகுதி சார்பாக இந்த நிகழ்ச்சி நடந்தது.