ஈரோடு, மே 18 –
இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் ஈரோடு ரிங் ரோட்டில் உள்ள கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவமனையில் நடந்தது. மூட்டு வலி, தோல் வியாதிகள், மாதவிடாய் பிரச்சனைகள், சர்க்கரை நோய், பக்கவாதம் உள்பட பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது.
சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் தன்யா நாயர் சிகிச்சை அளித்தார். இலவச பஞ்சகர்மா சிகிச்சையும் வழங்கப்பட்டது. கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை, அமிர்த தன்வந்திரி வைத்திய சாலா மற்றும் கேரள சமாஜம் சார்ட்டிபள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை தொழில் அதிபர் எம் சி ஆர் ராபின் தொடங்கி வைத்தார்.



