ஈரோடு, மே 2 –
இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் மாநிலத் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். அவைத் தலைவர் கிருஷ்ணன் பொதுக்குழுவை தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேசிய தலைவரான மாரிமுத்துவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அவரை மீண்டும் தேசியத் தலைவராக தேர்ந்தெடுப்பது, பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளராக நல்லசாமியை நியமனம் செய்வது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை சிறப்பான முறையில் அமைதியாகவும் நடத்துவற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது, மாநில மகளிர் அணி துணை செயலாளராக சரஸ்வதி, மாநில இளைஞர் அணி செயலாளராக கார்த்திக், பெருந்துறை ஒன்றிய செயலாளராக பழனிச்சாமி ஆகியோரை நியமனம் செய்வது, கடந்த சட்ட சபை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 90% வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமிக்கு நன்றி தெரிவிப்பது
மேலும் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில தலைவர் குருசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சரஸ்வதி, பெருந்துறை தொகுதி செயலாளர் நல்ல சாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாநில மகளிர் அணி சிறுபான்மை பிரிவு பூவாதம்மாள், பெருந்துறை ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



