ராமநாதபுரம், ஆக. 18 –
ரியாத் அல்-அபீர் மருத்துவமனை மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல மருத்துவ அணி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில் இந்திய தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுவின் தமிழர் பிரதிநிதி ஏர்வாடி முகைதீன் சலீம் தொடங்கி வைத்தார். அயலகத் தமிழர் நல வாரிய துணை சட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் மற்றும் NRTIA IWF நிர்வாகிகளும், உறுப்பினர்களும் முன்னிலை வகிக்க தோழமை அமைப்பு பிரதிநிதிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு முகாமை முறைப்படி ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஏர்வாடி முகைதீன் சலீம், NRTIA டாக்டர் சந்தோஷ் மற்றும் தம்பிஸ் உணவாக உரிமையாளர் வசீம், உலகளாவிய தமிழர்கள் நலச்சங்கம் தலைவர் செய்யது மரைக்காயர், தமாம் சமூக சேவகர் சுரேஷ் பாரதி, தமாம் KMCC பொறுப்பாளர் உசேன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜூலை 6 மதுரை மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் தலைவரின் உரைத் தொகுப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
மருத்து இறுதியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் இந்த முகாமை சிறப்பாக நடத்தித் தந்த அல் அபீர் மருத்துவமனை ரீஜனல் மேனேஜர் பிஜொ மார்க்கெட்டிங் மேனேஜர் மண்ஹஜ் மருத்துவமனை ஆபரேட்டர் மேனேஜர் நீமா உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரியாத் மண்டல மருத்துவ அணி சார்பாக நினைவு கேடயம் வழங்கப்பட்டது.



