தர்மபுரி, ஜூன் 16 –
தர்மபுரியில் வருடம் தோறும் ஆதி பவுண்டேஷன் சார்பில் செங்குருதி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தர்மபுரியில் உள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் செங்குருதி செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரமேஷ் என்பவருக்கு, சுமார் 45 முறை ரத்ததானம் கொடுத்துள்ள குருதிக்கொடையை பாராட்டி ஆதி பவுண்டேஷன் சார்பில் தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம், அனைவரும் தவறாமல் பிறருக்கு உதவும் வகையில் ரத்த தானத்தை வழங்கி மற்றவர்களின் உயிரை காக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் எனவும், பிறருக்கு ரத்தம் கொடுப்பதால் நமது உடலில் ரத்தம் அதிகரிக்குமே தவிர குறையாது என்றும் பேசினார்.



