கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 22 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக ரூ.1 கோடியே 31 இலட்சம் மதிப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணியை தொடங்கி வைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ரூ.3 கோடியே 10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கணினி ஆய்வு கூடம், புதிய பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சூளகிரி வட்டம், அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமுவேல், செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் அறங்காவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



