திருப்பூர், ஜூலை 28 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 86-ம் ஆண்டு துவக்க விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் பி.வி. கதிரவன் அன்பு ரமேஷ் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அரிசி மற்றும் சேலைகள் வழங்கி நலத்திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை அரசு கைவிட வேண்டும். அதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்றும் ஆவேசம் அடைந்து கேள்வி எழுப்பினார்.
இதனால் மாவட்ட ஆட்சியர்கள் ஜியோவை வாபஸ் பெறும் வரை தென் மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இரண்டு சீட்டு கேட்போம் என்றும் அதில் உசிலம்பட்டி முக்கியமாக கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார். தங்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியை தங்கள் கூட்டணியில் இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.