திருப்புவனம், ஜூலை 31 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் இல்லத்திற்கு சென்று அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அவரது தாயார் மற்றும் சகோதரரிடம் ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கொலையான கோவில் காவலாளி அஜித் குமார் வீட்டில் அவரது தாயார் மற்றும் சகோதரன் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
மிகுந்த வேதனைக்கும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்குரியது மக்களை பாதுகாக்க கூடிய காவல்துறையால் ஒரு உயிர் பலி போனது வருத்தம் அளிக்கிறது. கடந்த 23 ஆம் தேதி நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு கோவில் காவலாளியை போலீஸ் விசாரணை செய்து கொலை செய்துள்ளனர்.
இதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்தோம். அஜித் குமார் கொலைக்கு நீதி வேண்டும் என அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த வழக்கில் காவல்துறையினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர். நீதிமன்றமும் ஒரு குடிமகனை அரசே உயிர் இழப்பு ஏற்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தது.
எனவே இந்த அரசு வேறு வழியின்றி நடவடிக்கை எடுத்தது சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது காவலர்கள் இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்த வேண்டுமா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்த காரணத்தினால் இந்த சம்பவம் நடந்ததாக பரவலாக செய்திகள் வருகிறது. உடற்கூறு ஆய்வில் 44 இடத்தில் தாக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. அதனால் தான் அவர் இறந்ததாக தெரிகிறது. இதற்கு முழு பொறுப்பு இந்த அரசாங்கம் தான் ஏற்க வேண்டும். இந்த அரசாங்கம் சரியான முறையில் வழக்கை விசாரிக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது. இந்த அரசாங்கம் எப்போது பதவியேற்றதோ அப்போதே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன்.
சம்பவம் நடந்தது காவல்துறை உயர் அதிகாரிக்கு தெரியும். உரிய நடவடிக்கை எடுக்காமல் நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கை ஈடுபட்டதால் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருந்தது. மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை; தினந்தோறும் நடக்கிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தங்க நிலவரம் வருவதை போல தற்போது கொலை நிலவரம் என்ன என்பது போன்ற நடக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. 70 ஆணவ படுகொலைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார். வழக்கை வேண்டா வெறுப்பாக செய்த நிலையில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து போராட்டத்தால் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சிபிஐ யிடம் ஒப்படைத்துள்ளார்கள் என்றும் மேலும் இந்த வழக்கில் திமுக அரசு எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்று தான் தெரிகிறது. 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அஜித் குமார் சகோதரன் விரும்பிய இடத்தில் வேலை வழங்கப்படும். அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண உதவி காசோலையாக வழங்க மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.