நிலக்கோட்டை, ஆக. 27 –
அணைப்பட்டி அருகே சொக்குபிள்ளைபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி அருகே உள்ள சொக்குபிள்ளைபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு புண்ணிய நதிகலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரம்மாண்ட யாக சாலையில் வைத்து ஐந்து கால யாகவேள்விகள் திருபாதாரணைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று கடாம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து சீனிவாசன் நரசிம்மா சர்மா சாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சுரேஷ்பவுன் குழுவினரின் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் கலசத்திற்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை சொக்குபிள்ளைபட்டி கிராம முக்கியஸ்தர்கள் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.



