தென்தாமரைகுளம், ஜூலை 7 –
தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி பூஜைபுரைவிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் பிரேம் ஆனந்த், தி.மு.க நிர்வாகிகள் தமிழன் ஜானி, கிருஷ்ணகுமார், கணேசன், பால்பாண்டியன், கங்காதரன், அருள் அய்யப்பன், அகஸ்தியலிங்கம், முருகன், தேவகி, சந்திரகலா, லிங்கம், துரைபழம், சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.