புதுக்கடை, பிப்- 19
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் நேற்று மாலை புதுக்கடை சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். பரவை விலக்கு பகுதியில் வைத்து விழுந்தயம்பலம் பகுதி குஞ்சாகோடு என்ற இடத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லிப்னி (23) என்பவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து தொடர் விசாரணை நடத்தியதில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.