ஈரோடு ஜூலை 6
கர்நாடக மாநிலத்தில் பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது ஈரோட்டில் பல பகுதிகளிலும் பானி பூரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது இதையொட்டி ஈரோடு சத்தி ரோட்டில் பழனி மலை வீதியில் பானி பூரி தயார் செய்யும் இடங்களில் உணவுகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்போது
அங்குள்ள உள்ள வாடகை வீட்டில் அதிகாலை நேரத்தில் சோதனை நடத்தினர் அப்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் பானிபூரி அதற்கான உருளை கிழங்கு மற்றும் சுண்டல் மசாலா தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இங்கு தயாரிக்கப்படும் பானி பூரி மற்றும் அதற்குள் வைத்து சாப்பிடும் மசாலா பொருட்கள் பிளாஸ்டிக் பை மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு வினியோகிக்கிறார்கள்
வட மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு என்பவர் இதை மொத்தமாக தயாரிக்கிறார் வைத்து இந்த இடத்தை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது அங்கு சுகாதாரமில்லாமல் 5 மூட்டைகளில் பானிபூரை தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது மேலும் அழகிய உருளைக்கிழங்கு முட்டை வட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் ராக்ஸ் அவுட் எனப்படும் உப்பு கற்கள் மற்றும் தர மற்ற மசாலா பொருட்கள் வண்ணப் பொடிகள் உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்காக அழுகிய மற்றும் முளைத்து மோசமாக காணப்பட்ட உருளைகிழங்கு போன்றவற்றை உணவு படுத்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
இதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நிறுவன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானி பூரி மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளோம் இவர்களுக்கு தரமாக பானிபூரி தயாரிக்க உரிய பயிற்சி அளிக்கப்படும் மேலும் பானிபூரி விற்பனை செய்யும் இடங்களுக்கு உரிமம் வழங்கி பயிற்சி அளிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்