திண்டுக்கல் ஜூன் :22
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகில் மாங்கரை கிராமத்தில் ஏபிஜே. அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் என் தாய் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்குமாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரிமணிகண்டன் தலைமை தாங்கினார். என் தாய் அறக்கட்டளை நிறுவனர் குடும்ப நல ஆலோசகர் சேக் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாரதி அனைவரையும் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சமூக சேவகர் டாக்டர். மருதைகலாம் யோகா பயிற்சி விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்த் ,என் தாய் அறக்கட்டளை செயலாளர் செல்லம்மாள் , ஏபிஜே முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 6 வகையான கல்வி உபகரணங்கள் நோட்டு ,பேனா, பென்சில்,ஸ்கேல், ரப்பர் சார்பனர் வழங்கி கல்வி முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு வழங்கினார்கள். அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி பெருமாள் , ஊராட்சி நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.