சென்னை, ஏப்ரல் 5
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பரிந்துரை மற்றும் மாநில பாதுகாப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அவர் அடிக்கடி செல்லும் இடங்கள், நேரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் ஒரு பகுதியாக Y பிரிவு பாதுகாப்பில் பணியாற்றும் அதிகாரிகள் அவரது இல்லம் அருகே தங்கும் இடங்கள் மற்றும் அவரது இயக்கங்களை கண்காணிக்கப்படும் என்று தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது ஒரு அதிகாரி அவரது இல்லத்தில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். முழுமையான Y பிரிவு பாதுகாப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு விஜய்க்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இனிமேல் அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.