சென்னை, ஆகஸ்ட்- 23, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் மாநில மையத்துடன் இணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
எழும்பூர் எல். ஜி சாலையிலிருந்து இராஜரத்தினம் ஸ்டேடியம் வரை மாநில அளவிலான கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆர். சார்லஸ் தலைமை நடைபெற்ற இப்பேரணியில் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.குமரேசன்,பொருளாளர் பெரியசாமி,தமிழ்நாடு ஊராட்சி செயலாளார்கள் சங்க மாநில செயல் தலைவர் மணிராஜ், தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்கள் சங்கத் தலைவர் மு .சே .கணேசன் , ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் சார்லஸ் பேசியதாவது:-
12,525 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வி.பி.ஆர்.சி – பி.எல்.எஃப் கணக்காளர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு அடையாள அட்டைமற்றும் இன்சூரன்ஸ் திட்டம். வழங்க வேண்டும்.
மாத சம்பளமாக தமிழக அரசு பணி நிதி ஒதுக்கீடு செய்து தற்பொழுது பெற்று வரும் சம்பளத்தை உயர்த்தி பிரதி மாதம் ரூ.10 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து வரும் வட்டார மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை பணி நிரந்தரம் செய்து மாத ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கிட வேண்டும் .
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் உதவி திட்ட இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த மாநில அளவிலான கோரிக்கை பேரணியில் ,, கே .ரவி, செ .பீட்டர் அந்தோணிசாமி,கே . கணேசன், ஆர் .ரங்கராஜ் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அரசு பணியாளர்கள் மகளிர் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர் .