வேலூர்-11
வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் உள்ள முருகர் கோவில் தெருவில், கதிர்வேல் என்பவரின் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்கு, சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகாந்த்(46) என்பவர் இன்று,கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
கட்டும் பணியின் போது மொட்டை மாடியில் இருந்த, இரும்பு கம்பியை தூக்கும்போது எதிர்பாராத விதமாக, அருகில் இருந்த தெருவிளக்கு மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து விஜயகாந்த் தூக்கி வீசப்பட்டு, மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல் துறையினர் விஜயகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விஜயகாந்தின் உடலை பார்த்து அவர்து உறவினர்கள் கதரி அழுதது அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.