சென்னை, பிப்-12,
டாடாவின் துணை நிறுவனமான டனேராவும் பெங்களூரைச் சேர்ந்த ஜே .ஜே .ஆக்டிவ் பிட்னஸ் இணைந்து சென்னை நொளம்பூரில் அதிகாலை பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம் நடத்தியது.
சென்னை நகரம் முழுவதுமுள்ள பெண்கள் கலைநயமிக்க சேலைகளை அணிந்து நொளம்பூரில் கூடி இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பெண்மை, உடல் திறன் மற்றும் சுதந்திரத்துக்கான அர்ப்பணிப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சென்னை டனேரா புடவை ஓட்டம் நிகழ்ச்சியை டனேராவின் தலைமைச் செயல் அதிகாரி அம்புஜ் நாராயணன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
ஜே. ஜே. ஆக்டிவின் பயிற்சியாளர் பிரமோத் உடனிருந்தார்.
டனேராவின் தலைமைச்செயல் அதிகாரி அம்புஜ் நாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னை நகரம் முழுவதுமுள்ள பெண்கள் கலைநயமிக்க சேலைகளை அணிந்து நொளம்பூரில் கூடி இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உடல் திறன் மற்றும் சுதந்திரத்துக்கான அர்ப்பணிப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்மையின் வலு மற்றும் பன்முகத் தன்மையின் அடையாளமாக புடவையை மறுவரையறை செய்யும் நிகழ்ச்சி இது. ஜே ஜே ஆக்டிவ் உடனான எங்களது கூட்டு செயல்பாடு இந்தப் பார்வையை வலுப்படுத்தி, இன்றைய வாழ்க்கை முறைகளுக்கு சேலை எப்படிப் பொருந்துகிறது என்பதைக் காட்டுகிறது. பண்பாட்டுக்கும் செயல்வேகத்துக்கும் அடையாளமான சென்னை நகரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது அதை உறுதிப்படுத்துவதற்கே என்றார்.