வேலூர்_30
வேலூர் மாவட்டம் அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி) ரோட்டரி 4வது ரோட்ராக்ட் கிளப் ஆஃப் அக்சிலியம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் வேலூர் ஃபோர்ட் ஆர் ஐ 3231 நிறுவல் விழா மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது அக்சிலியம் கல்லூரியின் முதல்வர் அருட். சகோ. அ.ஆரோக்கிய ஜெயசீலி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சைபர் கிரைம் வேலூர் காவல் உதவி ஆய்வாளர் யுவராணி, மற்றும் சைபர் கிரைம் தலைமைக் காவலர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணைய விழிப்புணர்வு பற்றிய ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக அக்சிலியம் கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் வித்யா மற்றும் கணிதவியல் துறைப் பேராசிரியர் அருணா ஆகியோர் செயல்பட்டனர். மேலும் இந்நிகழ்விற்கு அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவியர்கள் பலர் பங்கேற்றனர் .