நாகர்கோவில் பிப் 27
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அமைந்துள்ள இலுப்பு மூடு இசக்கி அம்மன் ஆலயம் சுமார் பல தலைமுறைகளாகவும் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒரு குடும்பமாக வழிபாடு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கோவில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கோவில் என்பதால் பல வருடங்களாக ஒரே குடும்பத்தினர் கோவில் பராமரித்து திருவிழாக்களை நடத்தி வந்து கொண்டிருந்தனர். இதில் கோவில் குடும்பத்தினர் சில மாதங்கள் முன்பு வரை கோவிலை பராமரித்து பூஜைகள் நடத்தி கோவில் சாவினை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே வெளி நபர் ஒருவரிடம் கோவில் சாவியை கொடுத்து தற்காலிகமாக பராமரித்து பூஜைகள் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கோவிலுக்கு சொந்தமான குடும்ப உறவினர்கள் கோவிலுக்கு சென்றால் உங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்லை எனவும் மீறி வந்தால் உங்களை இல்லாமல் பண்ணி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே நூறு வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்த எங்களது குடும்பக்கோலை மீட்டு தரவும், தற்காலிகமாக கோயிலை பராமரிக்க அனுமதிக்க பட்டிருந்த நபருக்கும் கோயிலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத அவரை கோயில் நிர்வாகத்தில் இருந்து அகற்றி எங்களுக்கு மிரட்டல் விடுதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது