மார்த்தாண்டம், ஏப்- 20
நித்திரவிளை அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதி சேர்ந்தவர் சுனில் குமார் (35). இவரது மனைவி அபர்ணா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்கு பிறகு அபர்ணா மீது கணவன் மற்றறும் குடும்பத்தினர் பொறுப்பை காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவர் சுனில் குமார் அபர்ணாவை தகாத வார்த்தையில் பேசி கன்னத்தில் தாக்கியுள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான அபர்ணா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதில் மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு குழித்தறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த அபர்ணா கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.