பேரையூர்,அக்.03-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வேளாம்பூர் ஊராட்சி வெங்கடாஜலபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கினார். பேரையூர் வட்டாட்சியர் செல்லபாண்டியன், வேளாம்பூர் பிட் 1 கிராம நிர்வாக அலுவலர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தன்னார்வலர் ரஞ்சித்குமாரை பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.