மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம் கே மருது தலைமையில் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



