மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 48 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தளபதி நகரில் தமிழக துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு
அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்களுடன்
48 கிலோ வெட்டி இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 200 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயசந்திர பாண்டியன், சைலேந்திர சங்கர், மாவட்ட பொறியாளர் அணி காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் காமராஜ், விஜியரங்கன், ஒன்றிய பொருளாளர் குமார், ஊத்தங்கரை பேரூர் கழக அவைத்தலைவர் தனிகை குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பூபாலன், கலீல், சின்னத்தாய், கவுன்சிலர்கள் உதயகுமார், வெங்கடாசலம், விவசாய தொழிலாளர் அணி சத்தியநாராயணன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுமித்ரா, இளைஞர் அணி இளைய சூரியன், மோகன், சுதாகர், ஜாவித், ரவி, சக்திவேல், திருமலை, தள்ளாப்பாடி சங்கர்,தொண்டரணி அமைப்பாளர் சித்ரா, லிங்கா ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திக், திப்பம்பட்டி சீனிவாசன், சாசானூர் சாமிநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.