மதுரை ஜூன் 28,
மதுரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூபாய் 20.28 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட
சக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா.
அரசுத்துறைகளின் சார்பாக
வழங்கினார்கள். பல்வேறு 145 பயனாளிகளுக்கு ரூபாய் 20 இலட்சத்து 28 ஆயிரத்து 741 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், அரசுத்துறை அலுவலர்கள் கிராம புறங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட சக்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த மக்கள் தொடர்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூபாய் 20 இலட்சத்து 28 ஆயிரத்து 741 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநிலம் தேசிய அளவில் அனைத்து வகையிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது. இதற்கு அடிப்படையாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பு வழிவகை செய்கிறது. குறிப்பாக, 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம். பெண் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுமைப் பெண் திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தவறாமல் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் மூலமாக பயனாளிக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது பெயரில் தவறாமல் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அரசின் திட்டங்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டங்களை முழுமையாகப் பெற்று பயனடைய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாசௌ.சங்கீதா பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி, வைஷ்ணவி பால் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தசங்கீதா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா, மதுரை கிழக்கு வட்டாட்சியர் பழனிக்குமார், சக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மு.பொன்னுச்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.