பொள்ளாச்சி அக்:22
கோவை மாவட்டம்
பொள்ளாச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் முப்பெரும் விழாவாக கோவை சாலையில் அமைந்துள்ள சக்தி ஹோட்டலில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர்.சி. அர்ஷத் முபின் ஆகியோர் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பொள்ளாச்சி நகர் மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் இரா.சக்திவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாற்று மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் தலைக்கவசங்கல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சிறப்பாக சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த சமூக சேவை விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பொள்ளாச்சி பஞ்சலிங்கம், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெயபிரகாஷ் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா (எ) சிவலிங்கம் மாநில இளைஞரணி தலைவர் ரிஷாத் ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளர் ச.காளிமுத்து, இணை இயக்குனர் தென்னிந்திய திரைப்பட துறை சிறிநான் மணிகண்டன். மற்றும் அறக்கட்டளையின் மாநில துணைத் தலைவர் பொறியாளர் சையது ரியாஸ் கான், மதுரை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் ரவி, R.செந்தில் M.செந்தில்குமார் அப்பாஸ் மூர்த்தி வினோத்குமார் மனோஜ் குமார் கார்த்திகேயன் பாலமுருகன் ஜெய் கிஷோர் கண்ணன். மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் R.தினேஷ் பாபு, உட்பட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.