ஈரோடு மார்ச் 1
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதை ஒட்டி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன .மேலும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .
ஈரோடு கிழக்கு ,மேற்கு மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நலத்திட்ட உதவிகளை அந்த அந்த பகுதி நிர்வாகிகள் வழங்கினர்.
நசியனூர், சித்தோடு உள்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் முத்துசாமி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் கடந்த 17.2.25 முதல் வருகிற 17.4.2025 வரை 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் உபரியாக உள்ள கால்நடைகளை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திருக்கோயில் அர்ச்சகர் அல்லது பூசாரிகளுக்கு விலை இல்லாமல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கால்நடைகளை அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் மண்டல குழு தலைவர் ப.க. பழனிச்சாமி கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் கோட்டை ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் ஜெ. லதா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.