ஈரோடு பிப் 18
ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் 1,25,407 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், தற்போது வரையில் 60 வயது நிறைவடைந்த 10,133 அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.1200 ஓய்வூதியமும், 8 பேர்கள் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.500 ம் பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 19 தொழிலாளர் நலவாரியங்களில் மொத்தம் 13,720 தொழிலாளர்கள் புதிய நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். மேலும் 4,925 உறுப்பினர்கள் தங்களது நலவாரிய பதிவினை புதுப்பித்துள்ளனர்.
தற்போது, ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) 21,943 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், 609 தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகையும் 5 தொழிலாளர்களின் மகப்பேறுக்கான உதவித்தொகையாகயும் 44 தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கான உதவித்தொகையாகயும் இயற்கை மரணமடைந்த 284 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையும், கட்டுமான பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் விபத்து ஊனத்திற்கு 2 தொழிலாளர்களுக்கு உதவி தொகையும் 60 வயது நிறைவடைந்த 2229 தொழிலாளர்களுக்கு புதிதாக மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டது . மேலும் 8 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் குடும்ப ஓய்வூதியமும் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ டாக்சி வாகனம் வாங்குவதற்கு மானியமாக 2 பெண் ஓட்டுநர் பயனாளிக்கு மானியத் தொகையும் 25.143 பதிவு பெற்ற
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.20,34,98,052 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பெண் ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ டாக்சி வாகனம் வாங்குவதற்கான மானியத்தினை பெற்று ஆட்டோ வாகனம் ஓட்டி வரும் பெண் ஓட்டுநர் பேபி நிறைந்த மனதுடன்
தெரிவித்ததாவது
நான் ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 7-வகுப்பு படிக்கும் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர். நான் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வந்தேன். சொந்தமாக ஆட்டோ வாகனம் இல்லாததால் குறைந்தளவு வருமானமே கிடைத்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்சா தொழில்முறை டாக்சி வாகனம் வாங்க ரூ.1 இலட்சம் மானியம் வழங்குவது குறித்து செய்தி அறிந்து விண்ணப்பித்தேன்.
அதன்படி சொந்தமாக ஆட்டோ ரிக்சா தொழில்முறை டாக்சி வாகனம் வாங்கும் திட்டத்தின்கீழ் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்ட எனது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, எனக்கு சி.என்.ஜி.-ல் இயங்கக்கூடிய ஆட்டோ வாகனம் வாங்க ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் சொந்த வாகனம் வேண்டும் என்ற கனவு எனக்கு நிறைவேறியுள்ளது. மேலும், எனக்கு இதன்மூலம் கூடுதலாக கிடைக்கக்கூடிய வருமானம் எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், குடும்பத்தின் தேவைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதனால் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களை போன்ற இல்லத்தரசிகளும் தனித்து நின்று தன்னம்பிக்கையுடன் வாழ இது போன்ற திட்டங்களை வழங்கி எங்களது கனவுகளை நனவாக்கி எங்கள் வாழ்வை மேம்படுத்தி வரும் தமிழ் நாடு முதல் அமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்