தஞ்சாவூர். மே.27.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர் நாள் கூட்டத்தில் 34 பேருக்கு ரூபாய் 8.01லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்களை அளித் தனர்.
மேலும் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 34 பேருக்கு ரூபாய் 8.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப் பித்து தொழில் முனைவோர் பயிற்சி முடித்த 40 முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் சரவணன், கண்காணிப்பாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்



