ஈரோடு மே 23
ஈரோடு மாவட்டத்தில் 20 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ம் ஆண்டு வரை 59,679 தொழிலாளர்கள் புதிய நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தற்போது வரையில், ஈரோடு மாவட்டத்தில் 1,29,412 தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிந்து நலத்திட்ட உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிக்கான உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பதிவு பெற்ற 60 வயது நிறைவடைந்த தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியத்தில் பதிந்துள்ள 3835 தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 6843 தொழிலாளர்களும் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் 559 தொழிலாளர்களும் மொத்தம் 11,237 அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.1200/- வீதம் ஓய்வூதியமாகவும் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக 9 நபர்கள் மாதம் ரூ.500 வீதம் பெற்று வருகின்றனர்.
07.05.2021 முதல் 06.05.2025 வரை, 20 நலவாரியங்களிலும், பதிவு செய்துள்ள 57,485 தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையாக ரூ.12,43,10,150 மதிப்பிலும், திருமண உதவித்தொகையாக 1141 நபர்களுக்கு ரூ.1,56,12,000 மதிப்பிலும், 34 பெண் தொழிலாளர்களின் மகப்பேறுக்கான உதவித்தொகையாக ரூ.1,59,000/-ம், கண் கண்ணாடி
பெற்றுக்கொள்ள உதவித்தொகையாக 110 நபர்களுக்கு ரூ.68,500 மதிப்பிலும், பதிவு பெற்ற தொழிலாளர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1200 பெற 7,616 நபர்களுக்கு ரூ.33,81,31,772 மதிப்பிலும், மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக 9 நபர்களுக்கு ரூ.67,500 மதிப்பிலும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகையாக 1017 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.3,80,19,000 மதிப்பிலும், விபத்து மரணமடைந்த 34 தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.51,12,000 மதிப்பிலும், விபத்தில் ஊனமுற்ற 1 தொழிலாளிக்கு ரூ.50,000 மதிப்பிலும், பணியிடத்து விபத்து மரணமடைந்த 27 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.1,35,00,000 மதிப்பிலும் தமிழக அரசால் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக நலன்கருதி, உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவித்தொகைகளின்படி மொத்தம் 67,481 நபர்களுக்கு ரூ.53,50,29,922 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கைகள் சொந்தமாக புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் தொழில் முறை டாக்சி வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் பதிவுபெற்ற 6 பெண் ஓட்டுநர்களுக்கு சொந்தமாக வாகனம் வாங்குவதற்கு மானியமாக ரூ.1,00,000 வீதம் ரூ.6,00,000 வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 3 அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகள் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றமைக்காக ஊக்க உதவித் தொகையாக தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 வழங்கப்பட்டுள்ளது.


