மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் சரஸ்வதி மகாலில் தேசிய பாஜக பொதுக்குழு உறுப்பினர் மதுரை மக்களோடு மக்கள் சேவகி
மகாலட்சுமி பிறந்தநாள் விழா முன்னிட்டு ஒன்பதாவது ஆண்டாக தொடர்ந்து மக்கள் நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு நேரில் அழைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மேனாள் காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சுகந்தி சாம்பிராணி நிர்வாக இயக்குனர் ஜியர் பாபு, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தலைவர் ராஜகோபால் நாயுடு, பி டி ஆர் இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் பாலிடெக்னிக் சேர்மன் லயன் தன வேலவன், திரைப்பட நடிகர் பரணி மற்றும் மகாலட்சுமி அறக்கட்டளை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.