நாகர்கோவில் ஜூன் 11
நாகர்கோவில் மாநகராட்சியில் மில்லிங் செய்து புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம்
நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் தலைமையில் நேற்று மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு தலைமை செயலாளரால் வெளியிடப்பட்ட புதிய அரசாணையின் படி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டம் எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கக்கூடாது என விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சி 42 – வது வார்டு வேதநகர், சர்ச் தெருவின் சாலைப்பணிக்கான மதிப்பீட்டை தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 மூலம் பெற்று கொண்டதில் அதில் மில்லிங்கான மதிப்பீடு மாநகராட்சி பொறியாளர்களால் தயாரிக்கப்படவில்லை என்பதும், டென்டரில் மில்லிங்கான காரணி சேர்க்கப்படவில்லை என்பதும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையிலே மேற்குறிப்பிட்டுள்ள அரசாணை இன்றைய தேதி வரை நாகர்கோவில் மாநகராட்சியால் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. நாகர்கோவில் மாநகராட்சியின் அடுத்தடுத்த சாலை பணிகளாக இருக்கும் 26- வது வார்டு குளத்தூர் சாலை செப்பனிடுதல், 22- வது வார்டு பைப்புவிளை செப்பனிடுதல் என இனி வரும் அனைத்து சாலை பணிகளிலும் மில்லிங்கான செயற்பாடுகள் இணைக்கபட வேண்டும் என கோரியும் இதனால் சாலையின் மட்டம் உயராமல் வீடுகள் மழை வெள்ளங்களால் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படும் எனவும் வலியுறுத்தி நாகர்கோவில் வடக்கு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தியும் மேலும் மாநகராட்சி தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களை ஒன்று திரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன் நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் தொகுதி தலைவர் ஜெயன்றின், மேற்கு தொகுதி தலைவர் ஜான், மகளிர் பாசறை மிஷ்டா,நாகர்கோவில் தெற்கு தொகுதி செயலாளர் விஜிலன்,வடக்கு துணைத் தலைவர் ஆறுமுகம், வடக்கு இணைச் செயலாளர் சொக்கலிங்கம்,
வடக்கு தொகுதி பொருளாளர் ரெனோ திலக், தெற்கு செய்தி தொடர்பாளர் ஜெனித், நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.