கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து
விடப்பட்டுள்ளதால்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று 15.7.2024 மாலை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு நாளை 16.7.2024 முதல் மறு உத்தரவு வழங்கும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்
கி. சாந்தி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்கவும் தங்களுடைய கால்நடைகளையும் காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்
எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்