சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிநல்லூர் கிழக்கு ஒன்றியம்,மேலநீலிதநல்லூர் கிராமத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு
நிதியிலிருந்து
ரூ15 லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல மடையை சீரமைத்து நீர் பாசனக் கால்வாய் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார்.இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.