தென்தாமரைகுளம்., பிப்., 12 களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமூகப்பணித்துறை மற்றும் அருவிக்கரை பஞ்சாயத்து இணைந்து கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியர் தீபன் ராஜ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழிவு மேலாண்மை குறித்த கருத்துக்களை சிறப்பு விருந்தினரான துப்புரவு பணியாளர்களின் தலைவர் விஜியா பகிர்ந்து கொண்டார். மேலும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அலுவலக செயலாளர் உஷா கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவன் ஆல்ட்ரின் ஜோ ஒருங்கிணைத்திருந்தார்.



