நாகர்கோவில் நவ 15
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று துவக்கி வைத்தார்.
தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 மற்றும் சர்வதேச குழந்தைகளுக்கெதிரான தீங்கிழைத்தல் தடுப்பு தினம் நவம்பர் 19 ஆகிய தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். “நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வது ஆகும்” என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கையெழுத்து பிரச்சாரத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நடைபயண பேரணி எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து கோட்டார் சமூக சேவை
சங்கம் மூலம் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
நடைபெற்ற பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,
தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன். பயிற்சி துணை ஆட்சியர் பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூக நல அலுவலர்
விஜயமீனா. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்
ஜெயந்தி, குழந்தைகள் உதவி மையம் மாவட்ட சுகாதார அலுவலக
பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள்,ஆசிரியர் மாணவ, மாணவிகள் உட்பட பலர்
கலந்து கொண்டார்கள்.