வாக்காளர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ ஆய்வு
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட
வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு புதிய வாக்காளர்கள் சேர்ப்பது மற்றும் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகிய பணிகளை
ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் முகாமினை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். சங்கரன்கோவில் ஆய்வின் போது சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளரும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மனுமான லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், ஜெயக்குமார், மைதீன் ராஜா, பாலாஜி, ஷேக் மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.