தென்தாமரைகுளம்:,ஜன.13.
சந்தையடி ஊர் பொதுமக்கள் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா நேற்று சந்தையடி முத்தாரம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது.
கொட்டாரம் அடுத்துள்ள சந்தையடி ஊர் 67 வது படிப்பக ஆண்டு விழா,58-வது பொங்கல் விழா நேற்று முதல் தொடங்கி வருகிற 16 ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் விழாவான நேற்று ஊர் மக்கள் சார்பில் விவேகானந்தரின் 162 – வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் விவேகானந்தர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்புகளை வழங்கினார்.
இதில், விவேகானந்தா நற்பணிமன்ற தலைவர் மனோகரன், திருப்பணி குழு பொருளாளர் சிவராஜன்,அறங்காவலர் குழுவினர் சிங்காரவேல் ,பாலசுந்தரம்,பால்ராஜ் ,ராஜலிங்கம் ,ஆதிலிங்கம் ,கோவில் பணிவிடைகாரர் குமார், மற்றும் கண்ணன், தங்கநாடார் உட்பட ஊர்மக்கள் பலர் பங்கேற்றனர்.