கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி ரயில்வே பாலம் அடியில் (28.03.24) அன்று மாலை 4.30 மணியளவில் ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த TN 29 N 3190 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி வந்துகொண்டிருந்த TN 24 Q 7279 என்ற பதிவெண் கொண்ட APG என்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானத்தில் 30 க்கும் மேற்பட்டோற்கு பலத்த காயம் ஏற்பட்டது, அடிப்பட்டவர்களை அருகில் உள்ள சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும்
கொடுங்காயம் ஏற்பட்டவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அழைத்து வந்து உயர்சிகிச்சை அளிக்க
மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார்
வருவாய்த்துறை, காவல்துறை ,
இணை இயக்குனர் மருத்துவப் பணிகள்,
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
அதனடிப்படையில் ஊத்தங்கரை வட்டாட்சியர் மோகன்தாஸ் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு அறிவுரை வழங்கினார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் நரசிம்மன், எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், நகர அவைத்தலைவர் தனிகை குமரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி, அரவிந்த், வருவாய் ஆய்வாளர்கள் திருவேங்கடம்,
புஷ்பா, உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்
விபத்தில் காயமுற்றவர்களை நேரில் சென்று ஆறுதல்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics